மன்மதனின் 'ஏசி'!
'மன்மதன்' தந்த வெற்றியில், நடிகர் சிம்பு தன் 22வது பிறந்தநாளை ரசிகர்களுடன் சந்தோஷமாகக் கொண்டாடினார். அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இவரின் 'தொட்டி ஜெயா' மே அல்லது ஜூன் மாதத்தில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிவித்த சிம்பு ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கும் என்றார். இவருடன் இணையாக நடிக்கவிருக்கிறார் அசின். படத்தின் பெயர் 'ஏசி'! படத்தை இயக்கப்போவது எஸ்.ஜே. சூர்யா. (ராம்தாஸ் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது!)

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com