கவிஞர் பிரமிளின் 25ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவருக்கு மணிமண்டபம், உருவச் சிலை அமைத்தல், ஆவணப்படம் போன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரமிள் எழுதிய கவிதையையே தலைப்பாக்கி 'காற்றின் தீராத பக்கங்களில்' என்ற பெயரில் இவ்வாவணப்படம் உருவாகிறது. இப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். வெற்றியின் நண்பர் தங்கம் இயக்குகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரமிள் கவிஞர் மட்டுமல்லாமல் ஓவியரும் சிற்பியும் ஆவார். பிரமிள் மறைந்த வேலூரை அடுத்த கரடிக்குடியில் அவரது மணிமண்டபம் உருவாகி வருகிறது. அதில் இடம்பெற இருக்கும் பிரமிளின் உருவச்சிலையை பிரபல ஓவியரும், சென்னை ஓவியக் கல்லூரி முன்னாள் முதல்வரும், சிறந்த சிற்பியுமான சந்ரு உருவாக்கி வருகிறார். பேராசிரியரும் பிரமிளின் நண்பர் மற்றும் அவரது நூல்களின் பதிப்பாசிரியருமான கால. சுப்பிரமணியம் இந்த ஆவணப்பட உருவாக்கத்தை வழிநடத்துகிறார்.
மகா கவிஞனுக்குக் கலைஞர்களின் மரியாதை! |