கடந்த 23 ஆண்டுகளாகக் கடல் கடந்த தமிழ்த் தலைமுறையினருக்குத் தமிழ் மொழியைக் கற்பித்து வரும் பன்னாட்டுத் தமிழ் அகாடமி (International Tamil Academy) ஏப்ரல் 9, 2022 அன்று பன்னாட்டுத் தமிழ்ப் பாரம்பரிய நாளைக் கொண்டாடுகிறது.
இந்த நாளன்று, தமிழ் நாட்டின் கீழடியில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட சுமார் 1400 ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தின் முப்பரிமாண மாதிரிகள் (3D models) காட்சிக்கு வைக்கப்படும். கலாச்சாரம், கலை வணிகம் ஆகியவை கொண்டதொரு செழுமையான சமூக வாழ்வைக் கீழடி அகழாய்வு காண்பிக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இந்தக் கண்காட்சியில், தமிழ் அகாடமியின் மாணாக்கர்கள் இவற்றுக்கு விளக்கவுரையும் வழங்குவார்கள்.
பன்னாட்டுத் தமிழ் அகாடமியில் அமெரிக்காவின் 19 மாகாணங்கள் தவிர உலகின் 4 நாடுகளில் 15000 மாணாக்கர்கள் பயின்று வருகிறார்கள்.
நிகழ்ச்சி விவரம்: பன்னாட்டுத் தமிழ்ப் பாரம்பரிய நாள் நாள்: ஏப்ரல் 9, 2022 மாலை 4 மணி இடம்: சென்டர்வில் ஜூனியர் ஹைஸ்கூல், ஃப்ரீமான்ட்
வலையகம்: www.catamilacademy.org
தகவல்: ஸ்ரீவித்யா வேல்சாமி |