இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதெமி ஃபெலோஷிப்
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான இந்திரா பார்த்தசாரதிக்கு, ஃபெலோஷிப் அளித்து கௌரவித்துள்ளது சாகித்ய அகாதெமி. இந்திய எழுத்தாளர்களுக்கு அகாதெமி அளிக்கும் உச்சபட்ச அங்கீகாரம் இதுதான். இந்திய மொழிகளில் எல்லாவற்றிற்கும் சேர்த்து மொத்தம் 21 பேர் வரைதான் ஃபெல்லோவாக இருக்க முடியும். ஆர்.கே. நாராயணன், தகழி சிவசங்கரன் பிள்ளை, சிவராம் காரந்த், எம்.டி. வாசுதேவன் நாயர் போன்ற புகழ்பெற்ற படைப்பாளிகளின் வரிசையில் இந்திரா பார்த்தசாரதி சேர்கிறார். தமிழில் ஏற்கனவே ராஜாஜி, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், கே.ஆர். சீனிவாச ஐயங்கார் ஜெயகாந்தன் ஆகியோர் சாகித்ய அகாதெமியின் ஃபெலோஷிப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இ.பா. கௌரவிக்கப்படுவது, தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெருமை.



© TamilOnline.com