கணிதப் புதிர்கள்
1. 9, 7, 8, 8, 7, 9, 6 ..... வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?

2. பூஜ்யம் முதல் ஒன்பது வரையுள்ள எண்களையும் கணிதச் சமன்பாடுகளையும் பயன்படுத்தி விடையாக 1 வரச்செய்ய வேண்டும். இயலுமா?

3. சோமுவின் வயதையும் அவன் தம்பியின் வயதையும் கூட்டினால் வரும் கூட்டுத் தொகை 48. சோமு வயதின் இரண்டடுக்கையும் அவன் தம்பி வயதின் இரண்டடுக்கையும் கூட்டினால் 1170 வருகிறது. சோமுவின் வயதைவிட அவன் தம்பியின் வயது ஆறு வருடம் குறைவு என்றால் சோமுவின் வயது என்ன, அவன் தம்பியின் வயது என்ன?

4. அது ஒரு நான்கு இலக்க எண். முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகை பதின்மூன்று. இரண்டு மற்றும் மூன்றாம் இலக்கங்களின் கூட்டுத்தொகையும் பதின்மூன்று. மூன்று மற்றும் நான்காம் இலக்கங்களின் கூட்டுத்தொகையும் பதின்மூன்று. முதல் மற்றும் இறுதி இலக்க எண்களின் கூட்டுத்தொகையும் பதிமூன்று என்றால் அந்த எண் எது? அதே போன்ற வேறு எண் எது?

5. கேள்விக்குறியிட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது, ஏன்?
8 + 4 + 10 = 11
12 + 6 + 16 = 17
13 + 8 + 19 = ?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com