ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் திருநாளையொட்டித் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தொண்டாற்றிய தமிழ்ப் பேரறிஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதுகளை கீழ்க்கண்டோர் பெறுகின்றனர்:
திருவள்ளுவர் விருது - மீனாட்சிசுந்தரம் (பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறந்ததுடன் திருக்குறளைப் பரப்பி வருவதற்காக) காமராஜர் விருது - குமரி அனந்தன் அம்பேத்கர் விருது - மேனாள் நீதியரசர் கே. சந்துரு பெரியார் விருது - க. திருநாவுக்கரசு
பரிசுத் தொகையும் கேடயமும் அடங்கியது இவ்விருது. தற்போது வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாயை இவ்வாண்டு முதல் ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்தியுள்ளது தமிழக அரசு. பண முடிப்புடன், தங்கப் பதக்கம், சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும்.
விருதாளர்களுக்கு தென்றலின் வாழ்த்துகள். |