தெரியுமா?: தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்
தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றும் தமிழறிஞர்கள், கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது தமிழக அரசு. 2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளைக் கீழ்காணும் 16 பேர் பெறுகின்றனர்.

1. பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்
2. மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார்
3. பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கௌதமன்
4. சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்
5. சிங்காரவேலர் விருது - கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
6. தமிழ்த்தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
7. அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது - முனைவர் இரா. சஞ்சீவிராயர்
8. சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழ் (பார்க்க: மனுஷ்யபுத்திரன்)
9. தேவநேயப்பாவாணர் விருது - முனைவர் கு. அரசேந்திரன்
10. உமறுப்புலவர் விருது - நா. மம்மது
11. கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது - முனைவர் ம. இராசேந்திரன்



12. கம்பர் விருது - பாரதி பாஸ்கர்
13. ஜி.யு. போப் விருது - ஏ.எஸ். பன்னீர்செல்வன்
14. மறைமலையடிகள் விருது - சுகி.சிவம் (பார்க்க: 'சொல்வேந்தர்' சுகி சிவம்)
15. இளங்கோவடிகள் விருது- நெல்லை கண்ணன்
16. அயோத்திதாச பண்டிதர் விருது - ஞான. அலாய்சியஸ்

இந்த ஆண்டுமுதல் விருதுத் தொகை இரண்டு லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றும், விருதாளர்கள் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

விருதாளர்களுக்குத் தென்றலின் வாழ்த்துகள்

© TamilOnline.com