மீண்டும் மீண்டும்
முகிலாய் ஊர்ந்து
மழையாய் உதிரும்
மீண்டும் மீண்டும்...

விழுதாய் வளர்ந்து
விதையாய் வீழும்
மீண்டும் மீண்டும்...

உடலாய் மரித்து
உயிராய்ப் பிறக்கும்
மீண்டும் மீண்டும்...

வாயுவாய்ச் சிதறி
கதிரவனாய் உதிக்கும்
மீண்டும் மீண்டும்...

இறைவனின் சுழற்சியில்,
இல்லாமலே எல்லாம் இருக்கும்
மீண்டும் மீண்டும்.

செந்தில் தனகோடி,
வாஷிங்டன் டி.சி.

© TamilOnline.com