தேவையான பொருட்கள் அரிசி - 2 கிண்ணம் கடலைப்பருப்பு - 1/2 கிண்ணம் துவரம்பருப்பு - 1/2 கிண்ணம் பயத்தம் பருப்பு - 1/2 கிண்ணம் உளுத்தம்பருப்பு - 1/2 கிண்ணம் தேங்காய்த்துருவல் - 1/2 கிண்ணம் தயிர் - 2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை, கொத்துமல்லி (பொடியாக நறுக்கி) - 1/2 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப நெய் - 1 தேக்கரண்டி எண்ணெய் - பொரிக்க கடுகு - 1 தேக்கரண்டி
செய்முறை அரிசியை ரவைபோல உடைத்துக் கொள்ளவும். பருப்புகளை ஊறவைத்து எடுத்து வைக்கவும். இரண்டு மணி நேரமாவது ஊற வேண்டும். உப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து கொஞ்சம் கரகரப்பாக அரைத்தெடுத்து தேங்காய்த் துருவல், கொத்துமல்லி, கறிவேப்பிலை நெய்யெல்லாம் மாவில் போடவும். அரிசி உடைசல் உடன் எல்லாம் சேர்த்து தயிர் விட்டு ஒரு மணி நேரம் வைத்து, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்துப் போடவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கரண்டியால் மாவை எடுத்து ஊற்றிப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். வடை மிகவும் நன்றாக, சுவையாக இருக்கும்.
அமரர் தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |