பபாசி விருது
சென்னையின் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளுள் ஒன்று ஆண்டுதோறும் ஜனவரியில் நடக்கும் புத்தகக்காட்சி. 45வது சென்னை புத்தகக்காட்சி 2022, ஜனவரி 6 அன்று தொடங்கி 23ல் நிறைவுபெறவுள்ளது. இதன் தொடக்கவிழாவில், தமிழில் சிறப்பாக செயல்பட்டு வரும் படைப்பாளிகள், பதிப்பகத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்படுவார்கள்.

இவ்வாண்டு புத்தகக்காட்சியைத் தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கிறார்.

கீழ்க்காண்போர் இவ்வாண்டின் சிறந்த படைப்பாளிகளுக்கான கலைஞர் பொற்கிழி விருது பெறுகின்றனர்:
புதினம்: அ.வெண்ணிலா
கவிதை: ஆசை
உரைநடை: சமஸ்
நாடகம்: ப்ரஸன்னா ராமஸ்வாமி
பிற மொழிப்படைப்பாளிகள்: பால் சக்கரியா (மலையாளம்), மீனா கந்தசாமி (ஆங்கிலம்)பதிப்பாளர்கள் விருது
சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க. கணபதி விருது: ச.மெ. மீனாட்சி சுந்தரம் (மணிவாசகர் பதிப்பகம்)
சிறந்த பதிப்பாளர் விருது: ரவி தமிழ்வாணன் (மணிமேகலை பிரசுரம்)
சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் விருது: நாதம் கீதம் புக் செல்லர்ஸ்
சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ. வள்ளியப்பா விருது: திருவை பாபு
சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது: முனைவர் தேவிரா
சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது: பாரதி பாஸ்கர்
சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு. முத்து விருது: குடந்தை மு.வெ. பாலசுப்பிரமணியன்

விருது பெறுவோருக்குத் தென்றலின் வாழ்த்துகள்

© TamilOnline.com