1) 19 + 37 = 56. இந்தச் சமன்பாட்டில் உள்ள எண்களுக்கு இடையே பெருக்கல் குறி போட்டாலும் சமன்பாடு மாறுவதில்லை. அதாவது, 1x9 + 3x7 = 5x6 = 30. இதே போன்ற வேறு சமன்பாடுகளை உங்களால் கூற இயலுமா?
2) ஒரே மாதிரியான ஐந்து இலக்கங்களையும், கணிதச் சமன்பாடுகளையும் பயன்படுத்தி விடை 100 வரச் செய்ய வேண்டும். இயலுமா?
3) 252 = 25 x 25 = 625; 25ன் வர்க்கத்தில் அந்த எண்ணே கடைசி இரு இலக்கங்களாக அமைந்துள்ளது. இதே போன்ற வேறோர் எண்ணைக் கூற இயலுமா?
4) A, B, C என்ற மூன்று நபர்களின் வயதின் பெருக்குத்தொகை 96. அவர்களில் C-யின் வயது ஆறு வருடம் கழித்து 18 ஆகிறது என்றால் அவர்கள் ஒவ்வொருவரின் தற்போதைய வயது என்ன?
5) ஒரு பாட்டில் தேனின் எடை 2 கிலோ இருந்தது. அதில் பாதி அளவு தீர்ந்ததும் எடை பார்த்தபோது 1200 கிராம் இருந்தது. அப்படியானால் பாட்டிலின் எடை எவ்வளவு?
அரவிந்த்
விடைகள்1. இயலும். இதோ,
i) 18 + 39 = 57 ; 1x8 + 3x9 = 5x7 = 35;
ii) 38 + 29 = 67; 3x8 + 2x9 = 6x7 = 42
★★★★★
2. இயலும்.
111 - 11 = 100
(33 x 3) + 3/3 = 100
(5 x 5 x 5) - (5 x 5) = 100
(5 + 5 + 5 + 5) x 5 = 100
★★★★★
3. இயலும்.
762 = 76 x 76 = 5776.
★★★★★
4. A x B x C = 96
C-யின் வயது ஆறு வருடங்கள் கழித்து = 18
தற்போதைய வயது = 18 - 6 = 12
ஃ C = 12;
A x B x C = 96
A x B = 96/C = 96/12 = 8
A x B = 8
A = 2
B = 4
C = 12
- என்று இருக்கலாம். அல்லது
A = 1
B = 8
C = 12
- என்றும் இருக்கலாம்.
★★★★★
5. பாட்டிலின் எடை = x
தேனின் எடை = y
பாட்டில் + தேனின் எடை = 2 கிலோ = x + y = 2000 கிராம் -> (1)
பாதி அளவு தீர்ந்ததும் எடை = 1200 கிராம் = x + (y/2) = 1200 = 2x + y = 2400 -> (2)
2x + y = 2400 (-)
x + y = 2000
-------------------------
x = 400
-------------------------
பாட்டிலின் எடை = 400 கிராம்.