பாயும் ஒளி நீ எனக்கு
விக்ரம் பிரபு கதாநாயகன். நாயகி வாணிபோஜன். கார்த்திக் சவுத்ரி இயக்குகிறார். இவர் பல தெலுங்குப் படங்களில் பணிபுரிந்தவர். இப்போது தமிழுக்கு அறிமுகமாகிறார். பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வரசாகர், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். படம்பற்றி இயக்குநர் கார்த்திக் சவுத்ரி, "இது அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படம். விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத பாத்திரத்தில் நடிக்கிறார். அது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது. பாலுமகேந்திராவிடம் பயிற்சிபெற்ற சுரேஷ் பார்கவ் ஒளிப்பதிவு செய்கிறார்" என்கிறார். பாயட்டும் ஒளி.

அரவிந்த்

© TamilOnline.com