சிறுதானிய சுகியன்
தேவையான பொருட்கள்
சிறுதானியம் - 4 மேசைக்கரண்டி
பாதாம் - 1/4 கிண்ணம்
பொட்டுக்கடலை - 1/4 கிண்ணம்
வேர்க்கடலை - 1/4 கிண்ணம்
முந்திரி - 8
தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
எள் - 3 மேசைக்கரண்டி
வெல்லம் - 3/4 கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
வறுத்த கோதுமை மாவு - 1/4 கிண்ணம்
நெய் - 1 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 1 கிண்ணம்
மைதா அல்லது கோதுமை மாவு - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை
சிறு தானியங்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வாசனை வர வறுக்கவும். பின் மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கலக்கவும். வெல்லம், ஏலக்காய் சேர்த்துப் பிசையவும். சற்றுத் தளர்ந்து போகும். அதனால் வறுத்த கோதுமை மாவு கலந்து, நெய் சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். அரிசி மாவு, மைதா மாவு, சிட்டிகை உப்புப் போட்டு, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவுப் பதத்தில் கரைக்கவும். பின் எண்ணெய் காயவிட்டு, உருண்டைகளை மாவில் ஒவ்வொன்றாய்த் தோய்த்துப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்துச் சாப்பிடலாம். வெகு சுவையாக இருக்கும். பருப்புகள் இருப்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

அமரர் தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி

© TamilOnline.com