தேவையான பொருட்கள் சிறுதானியம் (மில்லட்) - 1/4 கிண்ணம் பொட்டுக்கடலை - 1/4 கிண்ணம் பாதாம்பருப்பு - 1/4 கிண்ணம் வேர்க்கடலை - 1/4 கிண்ணம் ரவை - 1/4 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம் பிஸ்தா - 4 மேசைக்கரண்டி வெல்லம் (அல்லது) கருப்பட்டி - 1 கிண்ணம் ஏலக்காய் - 6 நெய் - 1/4 கிண்ணம் முந்திரி - 8
செய்முறை வெறும் வாணலியில் பருப்புகளைத் தனித்தனியாகச் சிவக்க வறுக்கவும். தேங்காய்த் துருவலை வறுக்கவும். ரவையைச் சிவக்க வறுத்து, முந்திரியை நெய்விட்டு வறுத்து வைக்கவும். வறுத்த பருப்புகள், தேங்காய் எல்லாம் மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்து வெல்லத்தூள் போட்டு, ஏலக்காய்த்தூள் வறுத்த முந்திரியையும் போட்டு நன்றாகக் கலந்து நெய்யைச் சுடவைத்து ஊற்றி, சிறு சிறு லட்டுக்களாகப் பிடிக்கவும். கருப்பட்டியில் மண் இருக்கும். சிறிது தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சி, வடிகட்டி லட்டு பிடிக்கலாம். சுவைக்கேற்ப வெல்லம் போட்டுக்கொள்ளவும்.
அமரர் தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி |