சாக்ரமென்டோ தமிழ்ப் புத்தாண்டு விழா
கலிஃபோர்னியாவில் உள்ள சாக்ரமென்டோ தமிழ் மன்றம் அக்டோபர் 2ம் தேதியன்று தமிழ்ப் புத்தாண்டு விழாவை இணையம் வழியே நடத்தியது. இந்தியாவிலிருந்து திரைப்படப் பின்னணி பாடகர்கள், விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பங்கேற்றவர்கள் மற்றும் கலக்கப் போவது யாரு பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர்.ஃபோல்சம் தமிழ்ப் பள்ளி, திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி , ஔவை தமிழ்ப் பள்ளி, பாலவிஹார் மாணவர்கள் மற்றும் தமிழ் குடும்பங்கள் மட்டுமல்லாது பிற மொழி பேசுவோரும் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி, பாரதியார் பாடல்கள், பட்டி மன்றம், கும்மி நடனம், குறுநாடகம் மற்றும் பலவகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சந்தியா நவீன்,
சாக்ரமென்டோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com