நவம்பர் 2021: வாசகர்கடிதம்
அக்டோபர் இதழில் மறைந்த முன்னோடி எழுத்தாளர் ரா. வீழிநாதன் ஆற்றிய பணிகளையும் அவரின் சிறுகதை படைப்பையும் கல்கி, அமராவதி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக அவர் பணியாற்றியதையும் மிக அழகாகத் தென்றலுக்கே உரிய பாணியில் வாசகர்களுக்குக் கொண்டு வந்ததற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அக்காலத்தில் ஹிந்தி, சம்ஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் தேர்ச்சி பெற்று, பல நூல்களையும் மொழிபெயர்த்துத் தந்த பெருமை மறைந்த கல்கி அவர்களின் மூலமாக இவருக்குச் சேரும். நல்ல அறிமுகம் வாசகர்களுக்கு.

கே. ராகவன்,
பெங்களூரு

★★★★★


அக்டோபர் மாதத் தென்றல் இதழில் நேர்காணல் பகுதியில் ஜனனி அவர்களைப் பற்றிப் படித்தோம். அனிமல் கம்யூனிகேட்டர் என்ற ஒரு பிரிவு, அதன் அடிப்படை, அதன் படிப்படியான தொடர்ச்சிகள் எல்லாம் அறிந்து மிகமிக ஆச்சரியம் அடைந்தோம். விவரமான இந்தச் சிறப்பான நேர்காணலுக்கு ஜனனிக்கும் தென்றலுக்கும் மிக்க நன்றி.

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தன்னை அறியத் தருகிறார் கடவுள் என்னும் சின்னக்கதை மிகவும் அருமை. கடினமான தருணங்களிலும் மிக மிக அற்புதமாக வெளிவரும் தென்றலுக்கு எங்களின் அன்பு வாழ்த்தும் நன்றியும்.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com