வலியோர் சிலர்
வலியோரிடம் எளியோர் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது இப்படம். 'மெரினா புரட்சி' என்ற படத்தில் நாயகனாக நடித்த நவீன், இப்படத்தின் கதையை எழுதி இயக்குவதுடன் நாயகனாக நடிக்கிறார். உடன் கௌரி அனில்குமார், சுந்தர வடிவேலு, பிரசாத், பிரசாந்த் சீனிவாசன், விஜயலிங்கம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடுத்தர வர்க்க இளைஞருக்கும், காவல்துறை அதிகாரிக்கும் இடையே நடக்கும் போராட்டம் படத்தின் கரு. காவலர்களிடம் பணத்தைப் பறிகொடுத்து, அதை அவர்களிடம் இருந்து மீட்கப் போராடும் இளைஞனாக நவீன் நடிக்கிறார். வெளியாகுமுன்பே படம் விழாக்களில் பங்கேற்று இதுவரை ஏழு சர்வதேச விருதுகளைக் குவித்துள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com