தி ஜர்னி ஆஃப் பெட் (The Journey Of Bed)
இது தமிழ்ப் படம்தான். மாறுபட்ட தலைப்பைச் சூட்டியுள்ளார் இயக்குநர் மணிபாரதி. ஸ்ரீகாந்த் கதாநாயகன். சிருஷ்டி டாங்கே கதாநாயகி. உடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குநர் மணிபாரதி "இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். ஸ்ரீகாந்த் ஐ.டி.யில் பணிபுரியும் இளைஞராக நடிக்கிறார். ஸ்ரீகாந்தும் நண்பர்களும் ஊட்டிக்குப் பிக்னிக் போகும்போது நடக்கும் ஒரு கொலையும் தொடர்ந்து எதிர்கொள்ளும் சிக்கல்களும்தான் படம். சிருஷ்டி டாங்கே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com