முடக்கறுத்தான்
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானவர்களைப் பாரம்பரியச் சிகிச்சை மூலம் காப்பாற்றியவர் சித்த மருத்துவர் வீரபாபு. இவர் தயாரித்து, நடித்து, இயக்கியிருக்கும் படம் இது. நாயகனாக இவர் நடிக்க, நாயகியாக கோவையைச் சேர்ந்த மஹானா நடிக்கிறார். முன்னணி நடிக, நடிகையர் உடன் நடிக்கின்றனர். பாடல்களை பழநிபாரதி எழுத, சிற்பி இசையமைக்கிறார். "குழந்தைகள் கடத்தல் தொடர்பான திடுக்கிடும் சம்பவங்கள்தான் முடக்கறுத்தான் படத்தின் கதை. ஆக்‌ஷன், அதிரடி எனப் படம் விறுவிறுப்பாக இருக்கும். இன்றைக்குக் குழந்தைகள் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக முழுமையான ஓர் அமைப்பு, திட்டம் உருவாக்க வேண்டும் என்பது எனது பெரிய ஆசை. இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்" என்கிறார் மருத்துவர். முடக்கங்கள் நீங்கட்டும்.

அரவிந்த்

© TamilOnline.com