யானை
அருண் விஜய் நாயகனாக நடிக்கும் 33வது படம் இது. கதாநாயகியாக பிரியாபவானிசங்கர் நடிக்கிறார். உடன் ராஜேஷ், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, KGF புகழ் கருடா ராம், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை ஜி.வி. பிரகாஷ். இயக்கம் ஹரி. "சூர்யாவை வைத்து, 'சிங்கம்' எடுத்ததுபோல், அருண் விஜயை வைத்து 'யானை' என்று படம் எடுத்து வருகிறோம். கதாநாயகன் யானையைப்போல் பலமானவன் என்பது படம் பார்க்கும்போது தெரியும். கிராமத்துப் பின்னணி கொண்ட திகில் படம் இது" என்கிறார் ஹரி.

அரவிந்த்

© TamilOnline.com