தீபாவளி மருந்து (லேகியம்)
தேவையான பொருட்கள்
சுக்குப்பொடி - 1/2 கிண்ணம்
மஞ்சள்பொடி - 2 தேக்கரண்டி
கொத்துமல்லி விதை (தனியா) - 1/2 கிண்ணம்
ஜீரகம், சோம்பு, மிளகு - ஒவ்வொன்றும் 4 மேசைக்கரண்டி
ஓமம், கிராம்பு, கசகசா, ஏலக்காய், பட்டைத்துண்டுகள் - ஒவ்வொன்றும் 2 மேசைக்கரண்டி
ஜாதிக்காய் - 1
ஜாதிப்பத்திரி - ஒரு தேக்கரண்டி
சீவிய இஞ்சி - 1/2 கிண்ணம்
ஊறவைத்த உலர் பழங்கள் திராட்சை, ஏப்ரிகாட், பேரிச்சம் பழம், பாதாம் - ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடி அளவு (இவற்றை நைசாக அரைக்கவும்).
சீவிய வெல்லம் - 2 1/2 கிண்ணம்
தேன் - 1/4 கிண்ணம்
கல்கண்டு (அல்லது) சர்க்கரை - 1/2 கிண்ணம்
நல்லெண்ணெய் - 1/2 கிண்ணம்
நெய் - 1/2 கிண்ணம்
ஆப்பிள் ஆரஞ்சுப் பழரசம் - 2 கிண்ணம்
(கீழே கண்டவை இங்கு கிடைத்தால் சேர்க்கலாம்)
அரிசித்திப்பிலி, கண்டந் திப்பிலி, அதிமதுரம், வசம்பு, பரங்கிப்பட்டை - ஓரிரு துண்டுகள்

செய்முறை
உலர்ந்த மசலாப் பொருட்களை லேசாக வறுத்துப் பொடித்து சலிக்கவும். (சலித்த கப்பியைச் சேமித்து வைத்து, தேவையான பொழுது, இருமல், ஜுரத்திற்கு கஷாயம் செய்யலாம்.) பழச்சாற்றில், வெல்லம், கல்கண்டு சேர்த்து, நன்கு கொதி வந்ததும் பொடிகள், தேன், அரைத்த உலர்பழங்களைச் சேர்த்துக் கிளறவும். பிறகு எண்ணெய், நெய் சேர்த்து நிதானமான தீயில் பாத்திரத்தில் ஒட்டாமல் உருட்டுப்பதம் வரும்வரை கிளறவும். நன்கு ஆறியபின், பாட்டிலில் ஈரம் படாமல் வைத்தால் 6 மாதம் ஆனாலும் கெடாது. கங்கா ஸ்னானம் ஆனவுடன் முதலில்,

லேகியத்தைக் கடவுளுக்குப் படைத்தபின், நெல்லிக்காய் அளவு எடுத்து உண்ணலாம்.

வசுமதி கிருஷ்ணஸ்வாமி

© TamilOnline.com