கார்பன்
விதார்த்தின் 25வது படம். தன்யா பாலகிருஷ்ணன் கதாநாயகி. உடன் விக்ரம் ஜெகதீஷ், பாவ்லின் ஜெஷிகா, மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: சாம் சி.எஸ். கதை எழுதி இயக்குகிறார் ஸ்ரீனிவாசன். "ஒரு புதுமையான களத்தில் வித்தியாசமான திரில்லர் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை 6 இரவு மற்றும் 7 பகல் பொழுதுகளில் நடக்கிறது. விதார்த் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கு கனவில் காண்பெதெல்லாம் நிஜத்தில் பிரதியெடுத்ததுபோல் நடக்கும். அப்படியே அச்சுப் போல இது நடக்கும் என்பதால், படத்திற்குக் 'கார்பன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com