பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தன்னை அறியத் தருகிறார் கடவுள்
சிலர் இறந்து போனால் நீங்கள் கண்ணீர் சிந்துவீர்கள். வேறு சிலர் உங்கள் வழியே வந்தாலே நீங்கள் கண்ணீர் விடுவீர்கள்! அவர்களைத் தவிர்க்க வேண்டும். பறவைகளும் விலங்குகளும்கூடத் தன்னை அறியும்படிக் கடவுள் செய்கிறார்; எங்கோ வழிதவறிக் கெட்டுப்போன மனிதனின் கண்ணுக்கு அவர் தெரிவதில்லை. சமீபத்தில் தர்மாவரத்தில் ஏராளமான மனிதர்களையும் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு ஒரு குதிரைவண்டி ரயில் நிலையத்துக்குப் போய்க்கொண்டு இருந்தது. வண்டிக்காரன் குதிரையின் கழுத்திலும் முதுகிலும் இரக்கமில்லாமல் அடித்து விரட்டிக் கொண்டிருந்தான்.

நல்ல பளிச்சென்ற, ஆரோக்கியமான, தாடிவைத்த முதியவர் ஒருவர் அந்த வழியே போய்க்கொண்டிருந்தார். அவர் அந்த வண்டிக்காரனிடம், "இதோ பார்! கடிவாளத்தை அத்தனை இழுத்துப் பிடிக்காதே. கொஞ்சம் தளர்வாக விடு, குதிரை வேகமாக ஓடும்" என்றார். "சும்மா போ! என் குதிரையை எனக்குத் தெரியும்" என்று சீறினான் வண்டிக்காரன். "அவர் யார் தெரியுமா?" என்று வண்டியில் உட்கார்ந்திருந்த ஒருவர் கேட்டார். "யாராயிருந்தால் எனக்கென்ன!" என்றார் வண்டிக்காரர்.

அப்போது அவருக்கு ஒரு குரல் கேட்டது (பேசியது அந்தக் குதிரைதான்). "அவர்தான் கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு ரதம் ஓட்டியவர். அவருக்குக் குதிரைகளைப் பற்றி எல்லாம் தெரியும்!" வண்டியில் இருக்கும் யாரோ ஒருவர் இதைச் சொன்னதாக வண்டிக்காரன் நினைத்தான். பின்னே திரும்பிப் பார்த்து, "அவருக்கு அர்ஜுனனின் குதிரைகளைப் பற்றி எல்லாமே தெரிந்திருக்கலாம். என் குதிரையைப்பற்றி என்ன தெரியும்?" என்றான் அவன்.

நன்றி: சனாதன சாரதி, மே 2021.

சனாதன சாரதி தமிழ் மின்னூலுக்குச் சந்தா செலுத்த: saisundaram.org

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com