கணிதப் புதிர்கள்
1. 5,24,4; 6,35,5; 7, -, 6
மேற்கண்ட வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?

2. சிற்றூர் ஒன்றில் வசிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை = 38400. அதில் பெண்களின் எண்ணிக்கை 9600 என்றால், ஆண்களின் சதவிகிதம் என்ன?

3. ஒரு பால்காரரிடம் 15 பசுக்கள் இருந்தன. அவருக்கு மூன்று மகன்கள். தனக்கு வயதாவதால் மூன்று மகன்களுக்கும் ஆளுக்கு ஐந்து பசுக்கள் வீதம் பிரித்துக் கொடுக்க எண்ணினார். ஆனால், அதில் சிக்கல் என்னவென்றால், முதல் பசு ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் மட்டுமே தரும். இரண்டாவது பசு இரண்டு லிட்டர் தரும். மூன்றாவது பசு மூன்று லிட்டர். இப்படியே தொடர்ந்து 15வது பசு 15 லிட்டர் பால் தரும். பசுக்களின் எண்ணிக்கையும், அவை தரும் பாலின் லிட்டர் எண்ணிக்கையும் மூவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் பால்காரர். ஆனால், அதன்படிப் பிரித்துக் கொடுக்க அவரால் முடியவில்லை. ஆனால், பள்ளியில் படிக்கும் அவரது பேரன் இதனை அறிந்து சுலபமாக இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்துவிட்டான். அவன் எப்படி இந்தச் சிக்கலைச் சரி செய்திருப்பான்?

4. ஒரு திருமணத்திற்காக 59 நண்பர்கள் ஒன்று சேர்ந்து புறப்பட்டனர். அவர்கள் பயணத்திற்காக வந்த வேனில் மொத்தம் 9 பேர் மட்டுமே பயணிக்க முடியும். அதே போல ஒரு காரில் மொத்தம் நான்கு பேர் மட்டுமே பயணிக்க முடியும். அனைவரும் அவ்வாறே வேன்கள், கார்களில் புறப்பட்டனர். வேன் மற்றும் காரில் எந்த இருக்கையும் காலியாக இல்லை என்றால் அவர்கள் எத்தனை வேன் மற்றும் கார்களில் பயணப்பட்டிருப்பர்?

5. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 4692. இரண்டாம் எண், முதலாம் எண்ணின் இரு மடங்கு என்றால் அந்த எண்கள் எவை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com