தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 2 பைனாப்பிள் துண்டுகள் - 1/2 கிண்ணம் மாம்பழத் துண்டுகள் - 1/2 கிண்ணம் ஆப்பிள் துண்டுகள் - 1/4 கிண்ணம் திராட்சை - 15 சர்க்கரை - 1 1/2 கிண்ணம் நெய் - 2 தேக்கரண்டி ஏலக்காய் - சிறிதளவு
செய்முறை
பழத்துண்டுகளை வாணலியில் நெய்விட்டு, லேசாக வதக்கியபின் மசிக்கவும்.
திராட்சையை அப்படியே போடவும். ஒரு டம்ளர் தண்ணீரில் சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கரைந்து கொதிவரும் போது இறக்கி ஆறவைத்து, பழங்களில் கொட்டி ஒன்று சேரக் கலக்கவும். ஏலக்காய்ப் பொடி போடவும். இதுவும் மிகவும் சுவையான பச்சடியாகும்.
தங்கம் ராமசாமி |