இலந்தைப் பழ பச்சடி
தேவையான பொருட்கள்

இலந்தைப்பழம் - 1 கப்
சிவப்பு மிளகாய் - 5
வெல்லம் - 1 கிண்ணம்
உப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை

இலந்தைப் பழத்தைக் கொதிக்கும் வெந்நீரில் போட்டு எடுக்கவும். ஆறியதும் விதைகளை நீக்கிவிட்டு, உப்புச் சேர்த்து மிக்சியில் மைய அரைக்கவும். விழுதை அடுப்பில் வைத்து வெல்லம் போட்டுக் கொதிக்கவிடவும்.

சேர்ந்து கொதித்ததும் இறக்கி வைத்துக் கடுகு தாளிக்கவும்.

இது பித்தத்திற்கு நல்லது. சுவையான பச்சடி.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com