தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 8 உப்பு - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 3 வெல்லம் - 1 கிண்ணம் புளி - சிறிய எலுமிச்சம் பழம் அளவு மஞ்சள் பொடி - 1 சிட்டிகை கடுகு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு எண்ணெய் - 4 தேக்கரண்டி
செய்முறை
முதலில் வெண்டைக்காயைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக் காயைப் போட்டு வதக்கவும்.
வதங்கிக்கொண்டிருக்கும் வேளையில் உப்பு, மஞ்சள்பொடி ஆகியவற்றைச் சேர்த்து, கொஞ்சம் புளியைக் கரைத்து விட்டு வேகவிடவும்.
காய் வெந்தவுடன் வெல்லத்தைப் போடவும். வெல்ல வாசனை போகும்வரை கொதிக்க வைத்து இறக்கவும். கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளிக்கவும். செய்து பாருங்கள், வித்தியாசமாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |