விளாம்பழப் பச்சடி
தேவையான பொருட்கள்

விளாம்பழம் - 1
வெல்லம் (துருவியது) - விளாம்பழ அளவு
உப்பு - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

ஓட்டை உடைத்து விளாம்பழத்தை எடுத்து, சிறிது உப்புடன் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தூளைப் போட்டுக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக் கடுகு தாளிக்கவும். கூட மிளகாய் வேண்டுமென்றாலும் தாளிக்கலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com