·பெப்ருவரி 13, 2005 அன்று சிலின் ஏஷியன் சென்டர் சார்பாக, அரோரா பாலாஜி கோயிலில் 'மார்பக மற்றும் கர்ப்பப் பையில் புற்றுநோய்' என்பது பற்றியும் அவற்றை தடுக்கும் முறைகளைப் பற்றியும் டாக்டர் நர்மதா குப்புசாமி பேசினார். அவர் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள், பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் இவற்றைத் தெளிவாக விளக்கினார். நாற்பது வயதான பெண்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என வற்புறுத்திச் சொன்னார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு இலவசமாக 'மேமோகிராம்' மற்றும் 'பாப் ஸ்மியர்' சோதனைகள் செய்யப்படுகின்றன.
நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்துப் பேசிய மையத்தின் ஆலோசகர் ஸ்ரீ குருசாமி இதைப்போல இன்னும் பல நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் விபரம் அறிய: ஸ்ரீ குருசாமி, தொலைபேசி: 630.355.4322 (ext) 103.
ஜோலியட் ரகு |