செல்வி லக்ஷ்மி வெங்கடேசனின் பரதநாட்டிய அரங்கேற்றம்
செல்வி லக்ஷ்மி வெங்கடேசனின் பரத நாட்டிய அரங்கேற்றம் மே 1, 2005 அன்று சான்டா கிளாரா பல்கலைக் கழகத்தின் லூயி பி. மேயர் அரங்கத்தில் மாலை 4:00 மணிக்கு நடைபெறும். பதினைந்தே வயதான லக்ஷ்மி, அபிநயா நடனக் குழுமத்தின் கலை இயக்குனரான மைதிலி குமார் அவர்களிடம் பத்து ஆண்டுகள் நடனம் பயின்றுள்ளார்.

அபிநயா குழுமம் வழங்கிய 'பாயும் ஒளி', மயிலாடும் அழகன்', 'சனியின் சக்தி' உட்பட்ட பல கலைநிகழ்ச்சிகளில் லக்ஷ்மி முன்பே பங்கேற்றுள்ளார். தவிர கோவில்கள், பள்ளிகள் மற்றும் பிற தன்னார்வ நிறுவனங் களுக்காக நாட்டுப்புற நடனம் மற்றும் பரதம் ஆகியவற்றை ஆடியதுண்டு.

மைதிலி குமார் (நட்டுவாங்கம்), ஆஷா ரமேஷ் (குரலிசை), சாந்தி நாராயண் (வீணை), என். நாராயண் (மிருந்தங்கம்) ஆகியோர் நிகழ்ச்சிக்குப் பின்னணி வழங்குவர்.

-

© TamilOnline.com