கூட்டணி ஆட்சி!
சத்யராஜ் தலைமையில் 'கூட்டணி ஆட்சி' ஒன்று தமிழகத்தில் வரவிருக்கிறது. இந்தக் கூட்டணி ஆள வருவது செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அல்ல; தமிழகத் திரையரங்குகளை!

பிரியங்கா ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் 'மங்கை' அரிராஜன் தயாரிப் பில் உருவாகிறது 'கூட்டணி ஆட்சி'. இதில் சத்யராஜ் கதாநாயகன். கவுண்டமணியும், மணிவண்ணனும் உடன்சேர்ந்து கலக்க இருக்கிறார்கள். இசையை தேவா கவனித்துக் கொள்ள, பி. கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அகத்தியன், சுந்தர் சி போன்றோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய லட்சுமணன் திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்துக்குப் பொறுப்பேற்றிருக்கிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com