இந்த மாத இளந்தென்றலில் காலம் குறித்த வார்த்தைகளைப் பார்ப்போம்.
ஆண்டு அரையாண்டு காலாண்டு மாதம்
மாதங்களின் பெயர்கள் தமிழ் மாதங்கள் பன்னிரண்டு. அவை: சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி தை மாசி பங்குனி
ஒரு வாரத்தில் ஏழு கிழமைகள் உள்ளன. அவை: ஞாயிற்றுக்கிழமை திங்கள்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை
பருவ காலங்கள் இளவேனில் காலம் முதுவேனில் காலம் கார் காலம் கூதிர் காலம் முன்பனிக் காலம் பின்பனிக் காலம்
ஆங்கிலப் பருவங்களுக்கு இணையான பருவகாலங்கள்: வசந்த காலம் வேனில் காலம் இலையுதிர் காலம் பனிக் காலம் அல்லது குளிர் காலம்
பொழுதுகள் அதிகாலை காலை மதியம் நண்பகல் பிற்பகல் மாலை முன்னிரவு இரவு நள்ளிரவு
நேரத்தின் அலகுகள் மணி வினாடி நொடி நிமிடம்
இளமாரன் |