விவசாயியும், பாம்பும்
The Farmer and the Snake

It was winter. A Farmer found a Snake frozen stiff in the field. He took pity on it.
அது குளிர்காலம். வயல்காட்டுக்குள் பனியில் உறைந்து போயிருந்த ஒரு பாம்பை ஒரு விவசாயி பார்த்தார். அதன்மேல் இரக்கம் கொண்டார்.

He took the Snake and kept it in his bosom. The warmth of his body revived the Snake, which was quick to resume its natural instincts.
பாம்பை எடுத்துத் தன் நெஞ்சில் அணைத்துக் கொண்டார். அவரது உடலின் வெப்பத்தில் பாம்பு மீண்டும் சுயநிலை அடைந்தது. கூடவே அதன் விஷமகுணமும் திரும்பி வந்துவிட்டது.

The Snake inflicted a mortal wound on the Farmer swiftly.
விரைவாக அது விவசாயியைச் சாகும்படிக் கடித்தது.

"Oh," the Farmer lamented with his last breath, "I am rightly served for pitying a scoundrel."
"அடடா! ஒரு அயோக்கியனுக்கு இரக்கம் காட்டிய எனக்குச் சரியான தண்டனை கிடைத்தது" என்று இறக்கும் தறுவாயில் அந்த விவசாயி வருத்தப்பட்டார்.

Even the greatest kindness will not bind the ungrateful.
மிகப் பெரிய கருணைச் செயலும் நன்றி கெட்டவர்களைக் கட்டுப்படுத்தாது.

© TamilOnline.com