வாழைப் பழத் தயிர்ப்பச்சடி
தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 2
உப்பு - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 2
இஞ்சி - 1 துண்டு
கடுகு - 1 தேக்கரண்டி
தயிர் - 1 கிண்ணம்

செய்முறை

வாழைப்பழத்தை வில்லைகளாய் நறுக்கித் தயிரில் போடவும். பின்னர் உப்புப் போட்டு, கடுகு. இஞ்சி, மிளகாய் வற்றல் தாளிக்கவும். ரொம்பப் பழுக்காத பழமானால் நன்றாக இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com