தேவையான பொருட்கள்
புடலங்காய் - 1 சாண் நீளம் தயிர் - 1 கிண்ணம் மிளகாய் - 2 கடுகு - 1 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
புடலங்காயைப் பொடியாக, மெல்லிதாக நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்துத் தயிரில் போட்டு உப்புப் போட்டுக் கடுகு, மிளகாய் தாளிக்கவும்.இதே போல் செளசெள, வாழைத்தண்டு பச்சடிகள் செய்யலாம். இவைகளை வேகவிட்டுச் செய்யவும். வாழைத்தண்டைப் பச்சையாகவும் செய்யலாம்.
தங்கம் ராமசாமி |