வெள்ளரிக்காய்ப் பச்சடி
தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் - 1
உப்பு - 1 தேக்கரண்டி
தயிர் - 1 கிண்ணம்
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை

வெள்ளரிக்காயைத் தோல் சீவி உப்புப் போட்டு பிசிறிப் பிழியவும். தயிரில் உப்புப் போட்டு வெள்ளரிக்காயைப் போடவும். ஏற்கெனவே உப்புப் போட்டுப் பிசிறியிருப்பதால், கவனமாகப் போடவும். கடுகு மிளகாய் வற்றல் தாளிக்கவும். கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிப் போடவும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com