வெண்டைக்காய்ப் பச்சடி
தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - 6
தயிர் - 1 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

வெண்டைக்காயைச் சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டு அதில் போட்டு மொறுமொறுப்பாக வறுக்கவும். ஆறிய பின் தயிரில் போட்டு உப்புச் சேர்த்து கடுகு, மிளகாய் வற்றல் தாளிக்கவும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com