தேங்காய்ப் பச்சடி
தேவையான பொருட்கள்

தேங்காய் - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தயிர் - 1 கிண்ணம்
உப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 1
கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை

தேங்காய், பச்சைமிளகாயை மிக்சியில் நைசாக அரைத்துத் தயிரில் உப்புப் போட்டு அதில் விழுதைக் கலக்கி கடுகு மிளகாய் வற்றல் தாளிக்கவும். கொத்துமல்லி நறுக்கிப் போடவும். இதிலேயே தக்காளி நறுக்கியும் போடலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com