தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/2 தேக்கரண்டி கோதுமை - 1 தேக்கரண்டி மஞ்சள் - 1 சிறுதுண்டு கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி எண்ணெய் - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு கருவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு உப்பு - 1 தேக்கரண்டி தயிர் - 1 பெரிய கிண்ணம் மிளகாய் வற்றல் - 1
செய்முறை
பருப்புகள், வெந்தயம், கோதுமை, மஞ்சள் துண்டு எல்லாவற்றையும் வெறும் வாணலியில் சிவக்க தனித்தனியாக வறுத்துக் கொண்டு மிக்சியில் நைசாகப் பொடி செய்யவும். தயிரில் உப்புப் போட்டு பொடியைப் போட்டுக் கலக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் தாளிக்கவும்.
கருவேப்பிலை, கொத்துமல்லி போடவும். வெந்தயம் வறுப்பதற்குப் பதில் மிளகு ஒரு தேக்கரண்டி வறுத்தும் போட்டுக் கொள்ளலாம்.
தங்கம் ராமசாமி |