மாவடு பச்சடி
தேவையான பொருட்கள்

மாவடு - 6 அல்லது 7
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 1
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
தயிர் - 1 கிண்ணம்
பால் - 1/2 கிண்ணம்
கொத்துமல்லி, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிப்பதற்கு

செய்முறை

மாவடுவைக் கழுவி, மிளகாய், தேங்காயுடன் அரைத்துத் தயிரில் கலக்கிப் பால் விடவும்.

கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டு கடுகு, பெருங்காயம், மிளகாய் வற்றல் தாளிக்கவும். உளுத்தம் பருப்பு வேண்டுமானால் தாளிக்கலாம். உப்பு மாவடுவிலேயே இருக்கும். அதனால் தேவைக்கேற்பச் சேர்த்துக் கொள்ளவும்.

இதே போல் பச்சை மாங்காயை வதக்கி அரைத்தும் பச்சடி செய்தால் மிக நன்றாக இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com