ஜூன் 3, 2005 வெள்ளிக்கிழமை மாலை 8:00 மணிக்கு பண்டிட் ஹபீப் கான் (ஹிந்துஸ்தானி சிதார்) மற்றும் 'சங்கீத சாம்ராட்' ரவிகிரண் (கர்னாடக இசை சித்ரவீணை) ஆகியோர் வழங்கும் இணைந்திசை (ஜுகல்பந்தி) கபர்லி அரங்கில் நடைபெறும்.
ஹபீப் கான் சரஸ்வதி ஆலயம் மற்றும் குருகுலத்தின் நிறுவனரும் இசையாசிரியருமான கான் அவர்கள் மனிதக் குரலில் பாடுகையில் வரும் நுட்பங்களைச் சிதாரில் வாசிப்பதில் கொணரும் 'காயகி ஆங்' பாணியில் விற்பன்னராவார்.
கோட்டுவாத்யம் என்று என்று அழைக்கப்படும் 21 நரம்பு கொண்ட, வீணைவலிக்கட்டு (நரம்புகளை விரலால் அழுத்தும் குறுக்குக் கோடுகள்) இல்லாத, வட இந்தியாவில் விசித்ர வீணை என்று அறியப்படும் இந்த இசைக்கருவியில் உலகப் புகழ் பெற்றவர் ரவிகிரண்.
இவர்களுடன் பண்டிட் ஸ்வபன் சவுத்ரி (தபலா) மற்றும் வேலூர் ராமபத்ரன் (மிருதங்கம்) வாசிப்பார்கள்.
நாள்: ஜூன் 3, 2005, வெள்ளிக்கிழமை நேரம்: இரவு 8:00 மணி இடம்: கபர்லி அரங்கம் (4000 Middlefield Drive, Palo Alto CA 94303) நுழைவுச்சீட்டு: $50 (சிறப்பு), $25 (பொது)
சீட்டு வாங்கத் தொடர்புகொள்க: 408-464-1013, 650-255-9752, 408-528-0786 |