அர்ஜுன் இயக்கத்தில் 'மதராஸி'
அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க 'மதராஸி' என்ற பெயரில் ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் சுபாசந்தீப் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இதில் அர்ஜுன் நாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் படத்தை இயக்கவும் செய்கிறாராம்.

அர்ஜுன் இயக்கத்தில் வரும் ஏழாவது படம் 'மதராஸி'. தெலுங்குத் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக விளங்கும் ஜெகபதிபாபு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, கே.எஸ். செல்வராஜ் ஒளிப்பதிவில் உருவாகும் 'மதராஸி'க்கு ராஜுசுந்தரம் நடனம் அமைத்துக் கொடுக்கிறார். இப்படத்திற்கான பல புதுமையான சண்டைக் காட்சிகள் ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் படமாக்கப்படவுள்ளன.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com