'சந்திரமுகி' படம் ரஜினியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். ஸ்டைல், அரசியல் 'பன்ச்' வசனங்கள் என்று எதுவும் இல்லாத வித்தியாசமான ரஜினி படம்!
'பாபா'விற்குப் பின்பு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து 'சந்திரமுகி' திரைக்கு வந்து, நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
'சந்திரமுகி' ரஜினி ரசிகர்களுக்குச் சந்தோஷத்தைத் தந்திருக்கிற வேளையில் ரஜினியின் ஜப்பானிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ஒரு பௌத்தத் துறவி உட்பட ஐந்து ஜப்பானியர்கள் படம் வந்த முதல் நாளன்றே பார்க்க வேண்டுமென்று சென்னை வந்திருந்தினர். 'நிச்சயம் இப்படம் ஜப்பானில் நன்றாக ஓடும்' என்று கருத்துத் தெரிவித்தனர்.
ஆனால் சந்திரமுகி இப்போதைக்கு ஜப்பானில் வெளியிடப்படமாட்டாது என்று படத்தின் இயக்குநர் பி. வாசு கூறியுள்ளதே அவர்களது ஏமாற்றத்துக்குக் காரணம்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |