கலவை காய்கறி சூப்
தேவையான பொருட்கள்:
நறுக்கிய காய்கறிகள் - 2-3 கிண்ணம்
(கோஸ், கேரட், பட்டாணி, பீன்ஸ், கீரைவகைகள், பரங்கிக்காய், தக்காளிப்பழம் - 1 முதலியவை.)
1 ஆரஞ்சுப்பழத் தோல் (சிறுதுண்டுகளாக வெட்டியது
பயத்தம்பருப்பு - 1/4 கிண்ணம்

செய்முறை:
இவற்றைக் குக்கரில் நன்கு வேகவைக்கவும். பின் ருசிக்கு உப்பு, எலுமிச்சைச் சாறு மிளகுத்தூள் சேர்க்கவும். இத்துடன் (chia) ஷியா விதைகள், பாதாம், வறுத்த கடலை, முந்திரி, வால்நட், ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் இவற்றைச் சேர்த்து காலை உணவாகச் சாப்பிட்டால் வயிறு நிரம்பும். அதே சமயம் வயிறு இலேசாக இருக்கும். ஆரோக்கியமான ஆகாரம் இது.

வசுமதி கிருஷ்ணஸ்வாமி,
வெஸ்ட் புளூம்ஃபீல்டு, மிச்சிகன்

© TamilOnline.com