மைத்ரி நாட்யாலாயாவின் நடன நிகழ்ச்சி
ஜூலை 10 அன்று மைத்ரி நாட்யாலாயாவின் இயக்குநரும், ஆசிரியரும், சிறந்த நடனக் கலைஞருமான திருமதி ஷிர்னிகாந்த், தனது 45 மாணவிகளைக் கொண்டு சிறந்ததோர் நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினார். நிகழ்ச்சி சாரடோகா மொண்டால்வோ ஆர்ட் சென்டரில் சிறப்புற நடந்தது. குச்சிபுடியின் நடன ஸ்தாபகர் பத்மபூஷண் திரு. வேம்பட்டி சின்னசத்யம் அவர்களால் அமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் முதல் நிகழ்ச்சியாக, கணபதி வந்தனமான 'கணபதி கௌத்வம்' இடம்பெற்றது. பின்னர் முத்துசுவாமி தீக்ஷிதரின் திஸ்ர அலாரிப்பு 'ரங்கபுரா', பிருந்தாவனி ராகத்தில். அதனைத் தொடர்ந்து ராமாயண சப்தம், அம்பா அஷ்டகம் மற்றும் ஹிந்தோள ராகத் தில்லானா ஆகியவை தொடர்ந்தன.

நிகழ்ச்சியின் நிறைவாக, 'மைத்ரீம் பஜத'வில், சான் ஹோஸே, கலிஃபோர்னியாவைச் சார்ந்த ஸ்ரீபாதுகா அகாடமியின் 20 மாணவியர் பங்கேற்றனர். இவர்களுக்குத் திறம்படப் பயிற்சி அளித்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி அனைவரது பாராட்டையும் பெற்றார் திருமதி ஷிர்னிகாந்த் அவர்கள்.

இந்த நடனப்பள்ளி இதுவரை சுமார் 2.5 லட்சம் ரூபாய் வசூலித்து கோவிடால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கும், வருவாய் குன்றிய கலைஞர்களுக்கும் நிதி உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுபத்ரா பெருமாள்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com