பகைவனுக்கு அருள்வாய்
சசிகுமார் நாயகனாகவும் பிந்து மாதவி, வாணி போஜன் நாயகிகளாகவும் நடித்திருக்கும் படம். முக்கிய வேடங்களில் ஹரிஷ் பெரடி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல கன்னட நடிகர் சதீஷ் நீனான்சம் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். அனன்யா என்கிற 9 வயதுச் சிறுமி இப்படத்தின் பாடல்களை எழுதியிருக்கிறார். இசை : ஜிப்ரான். இயக்கம் அனீஸ். படம்பற்றி இயக்குநர், “சிறைச்சாலைகள் குறித்துப் பல ஆய்வுகள் செய்து சிறைச்சாலைகளின் இன்னொரு முகத்தை இப்படத்தில் பதிவு செய்திருக்கிறேன். 'பகைவனுக்கு அருள்வாய்' என்கிற பாரதியாரின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் சிறைச்சாலைகளுக்கு அவசியம் இருக்காது என்பதுதான் படம் சொல்லும் கருத்து” என்கிறார். முன்னாள் கைதிகள் சிலர் இப்படத்தின் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்கிறார் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com