உன் காதல் இருந்தால்
ஸ்ரீகாந்த் நாயகனாகவும், சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்திருக்கும் படம் 'உன் காதல் இருந்தால்'. இதுவரை படங்களில் வில்லனாகவே நடித்து வந்த ரியாஸ்கான் முதன்முறையாக நகைச்சுவை வேடம் ஏற்றுள்ளார். உடன் கஸ்தூரி, கிரேன் மனோகர், வையாபுரி, மக்பூல் சல்மான், சிராக் ஜானி, ஜென்சன், சோனா ஹைடன், சிரியா ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை ஸ்ரீகாந்த் தேவா. தயாரிப்பு, இயக்கம் ஹாசிம் மரிக்காரே. இப்படத்தில் கஸ்தூரி முதன்முறையாக இரட்டை வேடமேற்றுள்ளதாகச் சொல்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com