மீண்டும்
கதிரவன் கதாநாயகனாகவும் அனேகா நாயகியாகவும் நடித்துள்ள படம் இது. நீண்ட இடைவெளிக்குப் பின் ஷரவண சுப்பையா இயக்குகிறார். உடன் இயக்குநர்கள் 'யார்' கண்ணன், சுப்பிரமணிய சிவா, எஸ்.எஸ். ஸ்டான்லி, கேபிள் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷரவண சுப்பையாவும் முக்கிய வேடமேற்றுள்ளார். இந்துமதி, மோனிஷா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு இசை நரேன் பாலகுமார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஷரவண சுப்பையா இயக்கியிருக்கிறார். அதிரடி கலந்த ஆக்‌ஷன் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com