கசடதபற
ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா கசென்ட்ரா, சாந்தனு, விஜயலட்சுமி, வெங்கட்பிரபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடமேற்றுள்ளனர். படத்தொகுப்பாளர்களாக மு. காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன் கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் என ஆறுபேர் பணியாற்றியுள்ளனர். இசையமைப்பாளர்களாக யுவன்ஷங்கர்ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி, சாம் சி.எஸ்., ஷான் ரோல்டன் உள்ளிட்ட ஆறுபேர் பணிபுரிந்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவாளர்களாக எம்.எஸ். பிரபு, பாலசுப்ரமணியெம், விஜய் மில்டன், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர். கதிர் ஆகிய ஆறுபேர் பணியாற்றியுள்ளனர். வல்லின எழுத்துக்களான 'கசடதபற'வைப் போல் ஆறு முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார்.

அரவிந்த்

© TamilOnline.com