கணிதப் புதிர்கள்
1. 39, 12, 75; 65, 11, 83; 77, ?, 86...
மேற்கண்ட வரிசையில் - ? - இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?

2. ஒரு வயலில் ஒவ்வொரு நான்கடிக்கும் ஒரு தூண் வீதம் நடப்படுகிறது எனில் 100 அடி நீளத்திற்கு எத்தனை தூண்கள் தேவைப்படும்?

3. A, B என்ற இருவரிடமும் இருக்கும் டாலரின் மொத்த எண்ணிக்கை 160/- Cயிடம் இருக்கும் தொகையில் நான்கில் ஒரு பாகம் மட்டுமே Aயிடம் இருக்கிறது. Bயை விட அதிகமாக ஆறு மடங்கு தொகை Cயிடம் உள்ளதென்றால், A, B, C மூவரிடமும் இருக்கும் தொகை எவ்வளவு?

4. மூன்று எண்களின் சராசரி 37. அவற்றில் முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 65 என்றால் மூன்றாவது எண் என்னவாக இருக்கும்? மற்ற எண்கள் யாவை?

5. 4, 65, 85, 109, .... வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com